90ஸ் களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் தொகுப்பாளனி பெப்சி உமா. இவர் தமிழ் சினிமா நடிகைகள் அளவுக்கு தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். தொகுப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்றே இவரை சொல்லலாம்.
இவர் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பிறந்தார். இவருடைய முழு பெயர் உமா மகேஸ்வரி. இவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். அம்மா நடன கலைஞர் மற்றும் சிறந்த ஓவியர் உன் கூட. இவர் சென்னையில் பள்ளி படிப்பை படித்து வந்தார்.
இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது தூர்தர்ஷனில் ‘வாங்க பழகலாம் என்ற நிகழ்ச்சியின்’ மூலம் தொகுப்பாளனியாக அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியானது 100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக மக்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான’ பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாகிவிட்டார். அவர் அணிந்து வரும் சேலையை பார்ப்பதற்காகவே டிவி முன்பு காத்துக் கொண்டிருப்பார்கள் பெண்கள். உமாவின் சிரிப்பு, அழகு, குரல் என அனைத்துமே தனித்துவமாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது டிஆர்பி எகிற ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சியை இவர் 15 ஆண்டு காலமாக வெற்றிகரமாக தொகுப்பாளராக பணியாற்றினார். இவ்வளவு ரசிகர்களைக் கொண்டிருந்த அவருக்கு சினிமா வாய்ப்புகள் வராமல் இருக்குமா?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் ‘முத்து’ படத்தில் கதாநாயகியாக நடிக்க பெப்சி உமாவைக் கேட்டாராம். ஆனால் உமா மறுத்துவிட்டாராம். அதே போல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் தன்னுடைய ஒரு படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கவைக்கிறேன் எனக் கேட்டாராம். ஆனால் அதையும் பெப்ஸி உமா மறுத்துவிட்டாராம். ஏனோ அவருக்கு சினிமா மேல் ஆர்வம் இல்லையாம்.
