இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்தியுள்ளார். இதற்கு இந்திய இளம் ரசிகர்கள் எல்லோரும் இளையராஜா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போதைய ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இளையராஜாதான் ஏற்கனவே திருவாசகம் என்ற சிம்ஃபொனியை உருவாக்கி உள்ளாரே என்று.
ஆனால் திருவாசகம் இசைக்கப்பட்ட போதே அதை சிம்ஃபனி வடிவத்துக்குள் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் இப்போது சிம்ஃபனியின் கடுமையான வரையறைகளுக்குள் உட்பட்ட ‘வேலியண்ட்’ ஐ தற்போது தன்னுடைய 82 ஆவது வயதில் உருவாக்கியுள்ளார்.
மேலும் இதுதான் தன்னுடைய தொடக்கம் என்றும் இனிமேல் தொடர்ந்து தன்னிடம் இருந்து சிம்ஃபனிகள் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த வேலியண்ட் சிம்ஃபனியை 13 நாடுகளில் அரங்கேற்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.