பொதுவாகவே வெள்ளித்திரை நடிகர்களுக்கும் சின்னத்திரை நடிகர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதுதான் காதல் திருமணம். 80 மற்றும் 90 கால கட்டங்களில் இருந்து தற்போது வரை சினிமாக்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பிரபலங்கள் பலரும் தங்களுக்குள்ளேயே காதலித்து திருமணம் செய்து கொள்வது இன்றளவும் தொடர் கதையாக தான் இருக்கிறது. அப்படி காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டுமே கடைசிவரை ஒன்றாக வாழ்கின்றனர். பெரும்பாலான ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அதன்படி சின்ன திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்ற ஜோடிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜெயஸ்ரீ – ஈஸ்வர்:
சின்னத்திரை பிரபலங்களான இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமண வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில் ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
விஷ்ணு – ஹரிப்ரியா:
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி கொண்டிருப்பவர் தான் ஹரிப்பிரியா. அதனைப் போலவே வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்தான் விஷ்ணு. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
திவ்யா – அர்ணவ்:
சீரியல் நடிகர்களான இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு பல பிரச்சனைகளை சந்தித்து மீடியா வரை சென்று விவாகரத்து வரை சென்றது. தற்போது திவ்யாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ரச்சிதா – தினேஷ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தற்போது இவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
சம்யுக்தா – விக்னேஷ் காந்த்:
ஒரே சீரியலில் ஜோடியாக நடித்த இந்த சீரியல் பிரபலங்கள் நிஜத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்தது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொகுப்பாளினி பிரியங்கா:
பிரியங்கா தனது நீண்டகால காதலரான பிரவீன் குமாரை 2016 இல் மணந்தார். 2022 ஆம் ஆண்டில், பிரியங்காவும் அவரது கணவர் பிரவீன் குமாரும் விவாகரத்து செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. பின்னர் பிரியங்கா அதை அடிப்படையற்ற வதந்தி என்று நிராகரித்தார்.
தொகுப்பாளினி டிடி:
2014 இல் இவருக்கும் தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனிற்கும் திருமணம் நடைபெற்றது. 2017 இல் இவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.