சென்னை நீலாங்கரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து, பொதுமக்கள் நள்ளிரவில் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் விஜய்யின் இல்லம் அமைந்துள்ள இப்பகுதியில், நள்ளிரவிலும் நீடித்த கடுமையான மின்வெட்டால் தங்களால் தூங்க முடியாமல் அவதியடைவதாகக் கூறி மக்கள் வீதிக்கு வந்து போராடினர். அப்போது, தங்களுக்கு மட்டும் மணிணக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் வீட்டிற்கு மட்டும் தடையின்றி எப்படி மின்சாரம் கிடைக்கிறது என்று போராட்டக்காரர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் விநியோகத்தை சீரமைப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அதிகாலையில் மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.
