BREAKING: அதிமுகவிற்கு அடுத்த அதிர்ச்சி… மேலும் ஒரு MLA ராஜினாமா… காலையிலேயே இபிஎஸ் தலையில் இறங்கிய பேரிடி….!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான (MLA) இசக்கி சுப்பையா, அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கென இன்று சபாநாயகர் JCD பிரபாகரை நேரில் சந்தித்து தனது எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அதன் பின்னர் தவெக தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றுதான் அதிமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்தடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.