trai

இனி Call, Message க்கு தனித்தனியாக ரீசார்ஜ் செய்யணும்… TRAI அதிரடி உத்தரவு…

By Meena on டிசம்பர் 24, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மொபைல் போன் ஆனது உடலில் ஒரு பாகம் போல ஆகிவிட்டது. எங்கு சென்றாலும் உன் கையில் மொபைல் போன் தூக்கி செல்வது மொபைல் போன் இல்லாத ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். அப்படி ஒரு இடத்தை நம் வாழ்க்கையில் பிடித்து விட்டது இந்த மொபைல் போன். தற்போது சமீபத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களான airtel jio போன்றவை தங்களது சேவை கட்டங்களை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களை வருத்தமடைய செய்தாலும், BSNL இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு தங்களது சேவை கட்டணத்தை குறைத்தது. இதனால் பல வாடிக்கையாளர்கள் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களிலிருந்து BSNL க்கு மாறினார்கள்.

   

தற்போது அதையும் தாண்டி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அது என்னவென்றால் இனி கால் மற்றும் மெசேஜ்களுக்கு தனித்தனியாக ரீசார்ஜ் செய்யும் வகையில் உண்டான திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். அடுத்த 30 நாட்களுக்குள் இதை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறது. இந்த செய்தியை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

   

ஏனென்றால் முந்தைய காலகட்டத்தில் இணைய பயன்பாடு அதிகமாக இல்லாத நேரத்தில் கால்களுக்கும் மெசேஜ்களுக்கும் கட்டணம் செலுத்தி தான் வாடிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். இத்தனை நிமிடங்கள் தான் பேச வேண்டும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இவ்வளவு ரூபாய், ஒரு நாளைக்கு 100 மெசேஜ் தான் என்று கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தும்போது இலவச இணையம் மற்றும் இலவச அழைப்பு என்று அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தில் இலவசமாக இணையம் பயன்படுத்துவது கால்கள் எஸ்எம்எஸ் என அனைத்தையும் கொடுத்து மக்களை பழக்கி விட்டார்கள். இப்போது தனித்தனியாக கால்களுக்கும் மெசேஜ்களுக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும்.

 

TRAI இந்த முக்கிய முடிவை ஏற்பதற்கான காரணம் என்னவென்றால் பல பயனர்கள் ஒரே மொபைலில் இரண்டு சிம் கார்டை பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு சிம் மட்டுமே முழுமையாக செயல்படுகிறது. மற்றொரு சிம்மில் குரல் மற்றும் எஸ்எம்எஸ்க்கு பயன்படுத்தும் வகையில் தேவையில்லாமல் வைத்திருக்கிறார்கள். மொபைல் எண்கள் அரசின் சொத்து என்பதால் தொலைதொடர்பு நிறுவனங்கள் சரியாக இந்த மொபைல் எண்களை பயன்படுத்த வேண்டும் மக்கள் தேவையற்ற சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்பதற்காக TRAI இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதனால் ரீசார்ஜ் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்கள் மனதில் ஒருவித கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.