விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களில் தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் கம்மியான நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் family round நடக்கிறது. இதில் வீட்டிற்குள் முதல் ஆளாக தீபக் மனைவி மற்றும் அவருடைய மகன் உள்ளே வந்தார்கள். அடுத்ததாக மஞ்சரியின் குடும்பம் வந்துள்ளது.
மஞ்சரி மகன் ஓடி வந்து அவரை கட்டியணைக்கிறார். அம்மா மகன் பாசத்தை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. இந்த புரோமோ வெளியாகியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகளோ மஞ்சரிக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கிறதா? என பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram