சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமான சீரியல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்றால் அது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி தான் முன்னிலையில் இருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு இரண்டு தொலைக்காட்சிகளுமே மாறி மாறி புது புது சீரியல்களை களம் இறக்கி கொண்டு வருகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு சேனல்களிலும் பழைய தொடர்கள் முடிவுக்கு கொண்டு புத்தம் புதிய தொடர்களையும் களமிறக்கி வருகிறார்கள். தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலின் பெயர் சிந்து பைரவி.
இந்த தொடரில் ஈரமான ரோஜாவே 1, 2, வீட்டுக்கு வீடு வாசற்படி போன்ற தொடரின் மூலம் பிரபலமான திரவியம் மௌனராகம் சீரியல் புகழ் ரவீனா என பலரும் கமிட்டாகி உள்ளனர். இந்த நிலையில் சீரியல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.