தமிழக மக்களே.. கொடைக்கானலுக்கு 3 நாள் சுற்றுலா போக ரெடியா?.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Srimathi on ஆவணி 11, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்த, ஒரு அரிய திட்டத்தை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பில், சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு 3 நாள் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாக்கு பேருந்து வசதி, தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டி சேவைகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு, சென்னையில் இருந்த புறப்பட்டு, சனிக்கிழமை காலை கொடைக்கானலை சென்றடையலாம். அங்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ரெடியாகி உணவருந்தி விட்டு, பில்லர் ராக் தளத்தை சுற்றிப்பார்க்க செல்லலாம். பின் மதிய உணவு சாப்பிட்டு, பசுமை பள்ளத்தாக்கில் சுற்றிப் பார்த்துவிட்டு, கோக்கரஸ் வாக் பகுதியில் ஜாலியாக ஷாப்பிங் செய்யலாம். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டலுக்கு சென்று, இரவு உணவு உண்ணலாம்.

   

பின் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை உணவு சாப்பிட்டு, ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்யலாம். பின் கொடைக்கானல் ஏரியில் போட்டிங் செய்து விட்டு, சில்வர் கேஸ்கெட் அறிவிக்கு செல்லலாம். அங்கு மதிய உணவு சாப்பிட்டு, சென்னைக்கு புறப்படலாம். செல்லும் வழியில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்படும். திங்கட்கிழமை காலை 6:00 மணி அளவில் சென்னையை வந்தடையலாம்.

   

சென்னை-கொடைக்கானல், 3 நாள் சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட் கட்டணம், ஒருவருக்கு ரூ.7300. இதை www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாகவும், 1800 4253 1111 என்ற தொடர்பு எண் வாயிலாகவும் புக் செய்யலாம்.