உலக அழகி என பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் என்னதான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், இவருக்கு பாலிவுட்டில் தான் பட வாய்ப்பு அதிகமாக குவிந்துள்ளன. இவர் தமிழ் படங்களான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,ஜீன்ஸ், ராவணன் ,பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு பாலிவுட்டில் அதிக ரசிகர்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராய் ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து ஜோதா அக்பர் படத்தில் நடித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.அந்த படத்தில் முத்துக்களால் ஆன பல கோடி மதிப்புள்ள நகைகளை அவர் அணிந்து நடித்துள்ளாராம். அந்த நகையின் எடை 200 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவை அனைத்தும் ஒரிஜினல் நகையாகும். இதனால் படப்பிடிப்பின் போது அதனை பாதுகாக்க எப்போதும் ஐஸ்வர்யா ராய் சுற்றி பல காவலர்கள் இருந்தார்களாம் .
