விபத்தில் உயிரிழந்த மனைவி.. ரத்தம் சொட்ட சொட்ட உடலை வண்டியில் கட்டிக் கொண்டு சென்ற கணவர்.. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வீடியோ..!

By Divyamayakannan on ஆவணி 11, 2025

Spread the love

நாக்பூரில். ரக்ஷா பந்தன் அன்றைக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.  அமீத், கியார்சி என்ற தம்பதியினர் நாக்பூரில் உள்ள லோனாராவிலிருந்து மத்திய பிரதேசத்தின் கரண்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, மோப்பூர்  சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் கியார்சி சாலையில் விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, லாரி ஓட்டுநர் நிற்காமல் அந்தப் பெண்ணின் மீது மீண்டும் மோதிவிட்டு தப்பித்து ஓடியதாக தெரியவந்துள்ளது. அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது அந்தப் பெண்ணின் கணவர் அருகில் இருந்த மக்களிடம் உதவிக்கேட்டும் யாரும் உதவிச்செய்ய முன் வராததால்.  இறந்த மனைவியின் உடலை அவர்  இருசக்கர வாகனத்திலேயே கட்டிக்கொண்டு தனது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே  பின்த்தொடர்ந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்ததுடன், அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். பின்னர், நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். மேலும், இதைத்தொடர்ந்து  வழக்குப் பதிவுச்  செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.