ஜனநாயகத்தை கொள்ளை அடிக்கும் பாஜக… என்னால வேடிக்கை பாத்துட்டு சும்மா இருக்க முடியாது… கொந்தளிக்கும் ஸ்டாலின்…!

By Srimathi on ஆவணி 11, 2025

Spread the love

இந்திய ஜனநாயகத்தை, கொள்ளை அடிக்கும் பாஜகவின் முயற்சியை பார்த்து அமைதியாக முடியாது என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தை பாஜக மோசடி இயந்திரமாக மாற்றிய நிலையில், மகாதேவபுரா பகுதியில் நிகழ்ந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு, நிர்வாக குறைபாடு அல்ல. மக்களின் வாக்குகளை திருடுவதற்கான, சதி திட்டத்தை சகோதரர் ராகுல் காந்தி வெளிகொண்டு வந்தார். இதனை எதிர்த்து இந்திய கூட்டணி எம்பிக்கள், தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர்.

ஜனநாயகத்தை அழிக்கும் முறைகேடுக்கு எதிராக, திமுக போராடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில், 1 லட்சம் மேலான வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் மகாராஷ்ரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால், சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகம் என தெரிவித்தார்.

   

இதற்கு தேர்தல் ஆணையம் எந்தவிதமான பதிலும் அளிக்காத நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று, தேர்தல் ஆணையம் பதில் கூறியே  ஆக வேண்டும் என வலியுறுத்தினார். அவரின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் மீது, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யலாம் என ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கண்டிக்கும் விதமாக, எம்பிக்களுடன் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்தினார்.