நோய்டாவைச் சேர்ந்த சிவ மிஸ்ரா என்ற வாலிபர், தனது சகோதரருடன் லக்னோ செல்வதற்காக ஆன்லைனில் கேப் கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, காரை ஓட்டி வந்த டிரைவர் முந்தைய நாள் முதலிருந்தே ஓய்வின்றித் தொடர்ந்து வாகனம் ஓட்டி வந்ததால் கடுமையான சோர்வுடனும் தூக்கக் கலக்கத்துடனும் இருப்பதைச் சிவ மிஸ்ரா கவனித்துள்ளார்.
கடும் சோர்வோடு காரை ஓட்டினால் அசம்பாவிதம் மற்றும் ஆபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்த அவர், டிரைவரைத் திட்டி கம்பெனியில் புகார் அளிக்காமல் ஒரு நெகிழ்ச்சியான முடிவை எடுத்தார். டிரைவரைப் பின்பக்க சீட்டில் வசதியாகத் தூங்க வைத்துவிட்டு, காரின் ஸ்டீயரிங்கை சிவ மிஸ்ரா தனது கைகளில் எடுத்துக்கொண்டு லக்னோ நோக்கி காரை ஓட்டினார்.
https://www.instagram.com/reel/DdMSt5KvBMb/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
“டிரைவரிடம் சண்டை போட்டு என்னை லக்னோ கொண்டு போய் விடு என்று கட்டாயப்படுத்துவதை விட, இதையொரு அட்வென்ச்சராக எடுத்துக்கொண்டு காரை நானே ஓட்டுவதில் மகிழ்ச்சி” என்று அவர் பதிவிட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் தீயாகப் பரவி வருகிறது. “உண்மையான மனிதநேயம் கொண்ட தங்கமான மனிதர்” என நெட்டிசன்கள் சிவ மிஸ்ராவைப் பாராட்டி வருகின்றனர்.
