உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், இரண்டு பெரிய காளை மாடுகள் ஒன்றுடன் ஒன்று கொம்புகளைக் கோர்த்துக்கொண்டு வெறித்தனமாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த நபர் ஒருவர் மாடுகளை விரட்டுவதற்காக அருகே சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு காளை சண்டையிலிருந்து விடுபட்டு, நடுரோட்டை நோக்கி பயங்கர வேகத்தில் பாய்ந்து ஓடியது. அந்தச் சமயத்தில் அவ்வழியாகத் தனது ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் மீது அந்த காளையின் உடல் பலமாக மோதியது. இதில் நிலைகுலைந்த அந்தப் பெண், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மோதித் தூக்கி வீசப்பட்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அந்தப் பெண் நிலைதடுமாறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் அலைந்து திரியும் மாடுகளால் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகக் கூறி, சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ பகிரப்பட்டுப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
