ஐயோ கடவுளே… TGSRTC பேருந்து மோதி ராபிடோ பயணி இளம்பெண் பரிதாப பலி… கதறும் குடும்பம்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

By Swetha on புரட்டாதி 14, 2026

Spread the love

ஹைதராபாத்தின் அமீர்பேட்டை பகுதியில் தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றும், ராபிடோ பைக் டாக்சி ஒன்றும் மோதிக்கொண்ட கொடூர விபத்தில், 26 வயதான ஹேமதுர்கா என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் தீவிரத்தால் பைக் ஓட்டுநர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் பேருந்தின் வேகம், ஓட்டுநர்களின் கவனக்குறைவு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பான சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.

   

அதிவேகமும் கவனக்குறைவான ஓட்டுதலுமே இந்த சோகமான சம்பவத்திற்கு முதன்மை காரணியாக இருந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நகரப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பைக் டாக்சிகளின் வேகம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே மீண்டும் தீவிரமான கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.