Categories: சினிமா

ரோகிணிக்கு ஆதரவாக பேசும் பார்வதி… மீனாவின் தொழிலை கெடுக்கும் நபர்… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகிணி பார்வதியிடம் சென்று தனக்கு நடந்ததை கூறிக்கொண்டு அழுகிறாள். மனோஜ்க்கு வேலை கிடைக்கல அதனால் நாங்கள் கடைய ஆரம்பித்துவிட்டு லாபம் கிடைத்தவுடன் கொடுத்துவிடலாம் என்று தான் நினைத்தோம் என்று பார்வதி மூலம் விஜயாவிடம் பேச வைக்கலாம் என்று பேசுகிறார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு வருகிறார். பார்வதி என்னாச்சு விஜயா ஏன் இப்படி இருக்க என்று கேட்கும் போது நடந்தவற்றை விஜயா கூறுகிறார். பார்வதி ரோகிணி வந்து பேசியது வெளியே காட்டாமல் அவரா அட்வைஸ் பண்ணுவது போல் பேச ஆரம்பிக்கிறார். ப்படி பண்ணாத விஜயா நீ பண்ணது ரொம்ப தப்பு ரோகிணி அப்படி நடந்துக்கிட்டது யாருக்காக உன்னோட பையன் நாலு பேருக்கு முன்னாடி மரியாதையா இருக்கணும் அப்படிங்கிற காரணத்துனால தானே அவள் பண்ணுனா ஒரு தாய் இல்லாத புள்ள அவள அடிச்சிருக்க கூடாது.

ஒரு அளவுக்கு தான் கண்டிக்கணும் என் பையன பாரு பணம் கிடைச்ச உடனே வெளிநாட்ட பார்த்து போயிட்டான். நாங்க இங்க தனியா இருந்து கஷ்டப்படுறேன். நீ ரொம்ப அவங்களை அதே மாதிரி கஷ்டப்படுத்தினா என் நிலைமையும் உனக்கு வந்துரும் பிறகு ரோகினி மனோஜை தனியா கூட்டிட்டு போயிருவா என்று சொல்லி பயமுறுத்துகிறார். சரி சரி நான் பாத்துக்குறேன் என்று விஜயா வீட்டுக்கு சென்று விடுகிறார்.

அடுத்ததா மீனா புதிதாக மண்டபத்துக்கு டெக்கரேஷன் செய்வதற்கு மாடல் செய்து கொண்டு போய் வைக்கிறாள். அவர் தொழில் போட்டியாக இருக்கும் ஒரு பெண்மணி வந்து அவருடைய ஆட்கள் அந்த மாடலை அடித்து உடைத்து விடுகிறார்கள். மீனா கோபப்பட்டு என்னைய நீங்க தடுக்குறீங்க ஒரு நாள் என்னோட மாடல் வந்து கோபுரத்துக்கு போகும் என்று கூறுகிறார். அடுத்ததாக வீட்டில் அண்ணாமலை வேலைக்கு சென்று விட்டு வருகிறார் காபி கொடுத்துவிட்டு மனோஜ் ரோகினி பேசாம இருக்காங்க சாப்பிடாம இருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போது விஜயா வந்து மீனாவை திட்டுகிறார். என்ன எங்களுக்குள் சண்டை இழுத்து விட பாக்குறியா என்று கேட்கிறார். பிறகு அண்ணாமலை மீனாவை உள்ளே அனுப்பிவிட்டு விஜயாவுக்கு அறிவுரை கூறுகிறார். இப்படி பண்ணக்கூடாது ஒருத்தரை தூக்கி ஒருதரை இறக்கி நீ பார்க்காதே என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

இனி காசு கொடுத்தா தான் போக முடியும்… கப்பல்களுக்கு கட்டணம் போடும் ஈரான்… பின்னணியில் இருக்கும் ரகசியம்… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தக மற்றும் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான…

1 minute ago

“மக்களுக்குத் தண்ணி கூட கொடுக்கல.. விஜய் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்”…. கரூரில் நடந்தது என்ன?… போட்டுடைத்த பாஜக தலைவர்…. பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…

6 minutes ago

FLASH NEWS: ஜிவி பிரகாஷுக்கு விழுந்த அடி… இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 minutes ago

உல்லாசப் பயணம்.. நள்ளிரவில் ரூமுக்குள் நுழைந்த பெண்…. கோவா சொகுசு லாட்ஜில் தொழிலதிபருக்கு நேர்ந்த பயங்கரம்… அம்பலமான பகீர் உண்மை….!

கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…

16 minutes ago

“திடீர் திருப்பம்”…. கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு…. அண்ணன் – தம்பி போட்ட ரகசிய ப்ளான்… அடுத்து நடக்கப்போவது என்ன…?

ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…

21 minutes ago

“எனக்கு வேண்டாம் அந்த நாற்காலி”…. தேடி வந்த ஆஃபரை நிராகரித்த திருமாவளவன்…. DCM விவாதத்திற்கு நடுவே பரபரப்பு..!

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…

26 minutes ago