சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகிணி பார்வதியிடம் சென்று தனக்கு நடந்ததை கூறிக்கொண்டு அழுகிறாள். மனோஜ்க்கு வேலை கிடைக்கல அதனால் நாங்கள் கடைய ஆரம்பித்துவிட்டு லாபம் கிடைத்தவுடன் கொடுத்துவிடலாம் என்று தான் நினைத்தோம் என்று பார்வதி மூலம் விஜயாவிடம் பேச வைக்கலாம் என்று பேசுகிறார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு வருகிறார். பார்வதி என்னாச்சு விஜயா ஏன் இப்படி இருக்க என்று கேட்கும் போது நடந்தவற்றை விஜயா கூறுகிறார். பார்வதி ரோகிணி வந்து பேசியது வெளியே காட்டாமல் அவராக அட்வைஸ் பண்ணுவது போல் பேச ஆரம்பிக்கிறார். இப்படி பண்ணாத விஜயா நீ பண்ணது ரொம்ப தப்பு ரோகிணி அப்படி நடந்துக்கிட்டது யாருக்காக உன்னோட பையன் நாலு பேருக்கு முன்னாடி மரியாதையா இருக்கணும் அப்படிங்கிற காரணத்துனால தானே அவள் பண்ணுனா ஒரு தாய் இல்லாத புள்ள அவள அடிச்சிருக்க கூடாது.
ஒரு அளவுக்கு தான் கண்டிக்கணும் என் பையன பாரு பணம் கிடைச்ச உடனே வெளிநாட்ட பார்த்து போயிட்டான். நாங்க இங்க தனியா இருந்து கஷ்டப்படுறேன். நீ ரொம்ப அவங்களை அதே மாதிரி கஷ்டப்படுத்தினா என் நிலைமையும் உனக்கு வந்துரும் பிறகு ரோகினி மனோஜை தனியா கூட்டிட்டு போயிருவா என்று சொல்லி பயமுறுத்துகிறார். சரி சரி நான் பாத்துக்குறேன் என்று விஜயா வீட்டுக்கு சென்று விடுகிறார்.

அடுத்ததாக மீனா புதிதாக மண்டபத்துக்கு டெக்கரேஷன் செய்வதற்கு மாடல் செய்து கொண்டு போய் வைக்கிறாள். அவர் தொழில் போட்டியாக இருக்கும் ஒரு பெண்மணி வந்து அவருடைய ஆட்கள் அந்த மாடலை அடித்து உடைத்து விடுகிறார்கள். மீனா கோபப்பட்டு என்னைய நீங்க தடுக்குறீங்க ஒரு நாள் என்னோட மாடல் வந்து கோபுரத்துக்கு போகும் என்று கூறுகிறார். அடுத்ததாக வீட்டில் அண்ணாமலை வேலைக்கு சென்று விட்டு வருகிறார் காபி கொடுத்துவிட்டு மனோஜ் ரோகினி பேசாம இருக்காங்க சாப்பிடாம இருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போது விஜயா வந்து மீனாவை திட்டுகிறார். என்ன எங்களுக்குள் சண்டை இழுத்து விட பாக்குறியா என்று கேட்கிறார். பிறகு அண்ணாமலை மீனாவை உள்ளே அனுப்பிவிட்டு விஜயாவுக்கு அறிவுரை கூறுகிறார். இப்படி பண்ணக்கூடாது ஒருத்தரை தூக்கி ஒருதரை இறக்கி நீ பார்க்காதே என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
