கன்னட சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தார். இவருக்கு பித்தப்பை புற்றுநோய் இருந்தது. ஜெயிலர் படத்தில் நடித்திருப்பதால் தமிழ் சினிமாவிலும் ஓரளவு பிரபலமாக தான் இருக்கிறார். இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் தனது புற்றுநோய்க்காக வெளிநாட்டுக்கு சிகிச்சை செல்லப் போவதாக கூறிவிட்டு சென்றார்.

சிவராஜ்குமாருக்கு பித்தப்பை புற்று நோய் இருந்த பாதிப்பை அறிந்த கன்னட திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. புற்றுநோயின் சிகிச்சைக்காகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காகவும் அமெரிக்கா சென்றிருந்தார் சிவராஜ்குமார். இந்நிலையில் தற்போது இன்று புத்தாண்டை முன்னிட்டு தனது மனைவியுடன் உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் சிவ்ராஜ் குமார்.
அந்த விடியோவில் சிவராஜ்குமார் கூறியது என்னவென்றால் “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். என் உடல்நிலையை பற்றி சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிந்த பின்பு எனது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உடன் பணியாற்றிய நடிகர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியவர்கள் கொடுத்த ஆதரவும், பிரார்த்தனையும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.
தலில் இந்த புற்றுநோய் எனக்கு இருக்கிறது என்று தெரிந்தவுடன் நான் மிகவும் பயந்து போனேன். உங்களுடைய ஆதரவால் நான் இன்று மீண்டு வந்துள்ளேன். இங்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து முடித்திருக்கிறேன். புதிதாக பித்தப்பை வைக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தபின் எனக்கு கேன்சர் இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. இப்போது நான் கேன்சர் பிரீ மனிதனாக ஆகிவிட்டேன். ஆதரவு கொடுத்ததற்கும் எனக்காக பிரார்த்தனை செய்தாவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.

இப்போது புற்றுநோய் இல்லை. நான் புது மனிதனாக மாறிவிட்டேன். இனி உடல் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இன்னும் இரண்டு மாதங்களில் நான் உடல் நலம் தேறி விடுவேன். மார்ச் மாதத்திற்கு பிறகு நான் மறுபடியும் சினிமாவில் நடிப்பதற்கு வந்து விடுவேன். என்னால் டான்ஸ் ஆடவும் சண்டை செய்யவும் முடியும் என்பதை சந்தோஷத்துடன் இந்த நேரத்தில் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று தனது மனைவியுடன் அந்த வீடியோவில் உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார் சிவராஜ்குமார்.
Happy news, #ShivarajKumar sir declares himself cancer-free after successful surgery 👍#Thalaivar #Rajinikanth fans wishes and welcomes #Shivanna again to #Jailer2 Squad 💥
— Rajini✰Followers (@RajiniFollowers) January 1, 2025
