உலகத்தில் மிகவும் பிரபலமான மனிதர்களுள் ஒருவர் எலன் மஸ்க். டெஸ்லா, ஸபேஸ் எக்ஸ், ட்விட்டர் ஆகியவற்றின் தலைமை அதிகாரியாக இருக்கும் எலன் மஸ்க் தனது எக்ஸ் தாளத்தில் தனது சுயவிவரப் பெயரை மாற்றி இருக்கிறார் மற்றும் தனது சுயவிவர படத்தை மாற்றி இருக்கிறார். இவர் இந்த மாற்றத்தை செய்வதற்கான காரணம் என்ன என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.

எலன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் சுயவிவரப் பெயரை “கெக்கியஸ் மாக்சிமஸ்” என மாற்றியுள்ளார். மேலும் பிரபலமான “பேபே தி பிராக்” மீம் படத்தையும் தனது சுயவிவரா படமாக மாற்றி இருக்கிறார். இந்த கெக்கியஸ் மாக்ஸிமஸ் என்பதை ஈத்தேரியம் மற்றும் சோலானா போன்ற பல்வேறு பிளாக் செயின் தளங்களில் இயங்கும் ஒரு மீமால் சித்தரிக்கப்பட்ட கிரிப்டோ கரன்சி டோக்கன் ஆகும். இந்த டோக்கன் கிரிப்டோகரன்சி சந்தையில் மிகுந்த வரவேற்பு பெற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி இந்த கெக்கியாஸ் மாக்சிமஸ் இமேஜ் மதிப்பு சுமார் 0.005667 டாலர் என இருந்தது. ஆனால் எலான் மாஸ்க் தனது பெயரை மாற்றிய பிறகு சுமார் 24 மணி நேரத்தில் இந்த பிட் காயின் மதிப்பு சுமார் 497.56 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதை பார்க்கும் பொழுது எலன் மஸ்க் ஒரு பெரிய திட்டத்தோடு தான் தனது பெயரை கெக்கியஸ் மாக்சிமஸ் என்று மாற்றி இருக்கிறார் என்பது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

எலான் மஸ்க் தனது twitter பக்கத்தில் ஒரு பதிவில் கெக்கியஸ் மாக்சிமஸ் விரைவில் ஹார்டுகோர் PoE இல் நிலை 80 ஐ எட்டும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் தான் தேர்தலில் வெற்றி அடைந்த பிறகு கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டை உயர்த்துவேன் என்று கூறியிருந்தார். தற்போது எலன் மஸ்கின் இந்த செயல் நெட்டிசன்கள் இடையே பரபரப்பையும் விவாதிக்கப்படும் பொருளாகவும் மாறி இருக்கிறது.
