இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அபாரமாக வளர்ந்து இருக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்களின் பணி குறைந்துவிட்டாலும் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்கு குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆன்லைன் மோசடியால் பலர் பணத்தை இழந்த செய்திகளையும் நாம் பார்த்திருப்போம். இந்த சைபர் மோசடிகளை தடுக்கும் விதமாக TRAI ஒரு புதிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
அது என்னவென்றால் இப்போதைய கால கட்டத்தில் தங்களது தேவைக்கேற்ப அடுத்தவர்களின் பெயர்களில் ஒருவர் சிம் கார்டு வாங்கி அதை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI அறிவித்திருக்கிறது. போலி அழைப்புகள் எஸ்எம்எஸ் செய்தி தேவையில்லாத ஆப்புகள் மூலம் பண மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில் TRAI கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தேவையில்லாத சிம்கார்டு பயன்படுத்திய எண்கள் முடக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடிகளை தடுப்பதற்கு அரசு பல திட்டங்களையும் வழிமுறைகளையும் ஏற்படுத்தி வருகிறது. யாரேனும் போலி சிம் கார்டு மற்றவர் பெயர்களில் வாங்கி ஏதேனும் தவறு செய்து மாட்டிக் கொண்டார்கள் என்றால் அவர்களை மூன்று ஆண்டுகள் கருப்பு பட்டியலில் சேர்ப்பார்கள். மற்றவர் பெயரில் சிம் கார்டு வாங்கி மோசடி செய்பவர்களை TRAI பிளாக் லிஸ்ட் செய்து விடும். மூன்றாண்டுகள் வரை இவர்களுக்கு தடை விதிக்கப்படும். பட்டியலில் உள்ளவர்கள் புதிய சிம் கார்டுகள் வாங்க முடியாது. மற்றவர்களின் பெயரில் சிம் கார்டு வாங்கி பயன்படுத்துவது என்பது குற்றமாக கருதப்படும் என்று TRAI கூறியிருக்கிறது.
வியாபார நோக்கில் செயல்படுத்தப்படும் ஸ்கேமான போலி அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில், தொடர்பு நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க்கில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்கேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. வாடிக்கையாளர் அழைப்புகள் குறித்து புகார் அளித்தால் தொலைத்தொடர்பு நிறுவனம் அந்த சிக்கலை தீர்த்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அவர்களே முழு பொறுப்பையும் எடுக்க வேண்டும் என்று TRAI அறிவுறுத்தி இருக்கிறது.