Connect with us

“எனக்கு பிச்சை போட வேண்டாம்”.. நடந்தது இது தான்.. அமீர் வெளியிட்ட வீடியோவால் மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் ‘பருத்திவீரன்’ விவகாரம்..

CINEMA

“எனக்கு பிச்சை போட வேண்டாம்”.. நடந்தது இது தான்.. அமீர் வெளியிட்ட வீடியோவால் மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் ‘பருத்திவீரன்’ விவகாரம்..

 

‘பருத்தி வீரன்’ பட சர்ச்சையானது பல ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இணையத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் இயக்குனர் அமீருக்கே தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியனுக்கு கடிதம் ஒன்றை அமீர் எழுதி உள்ளார்.

   

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,  “வணக்கம். நான் இயக்குனர் அமீர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல். சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்,  எனது ‘பருத்திவீரன் ‘ தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.

ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பருத்திவீரன்’ திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், சிவசக்தி பாண்டியன் அவர்களுடைய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் நான் கடந்து விட்டால், நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். எனவே, சிவசக்தி பாண்டியனாகிய உங்களுக்கும், ‘பருத்திவீரன்’ படம் சம்பந்தமான பிரச்சினையில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், ஊடகத் துறையினருக்கும் உண்மை நிலையைத் தெரிவிக்க மட்டுமே இந்தக் கடிதம்.! இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.’ என்று குறிப்பிட்ட அவர், பருத்தி வீரன் பட பிரச்சனையில் நடந்த சம்பவங்களையெல்லாம் குறிப்பிட்டு

நான் பெற விரும்புவது, ‘யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..’ என்பதை மீண்டும் மீண்டும் தங்களுக்கும், இப்பிரச்சினை சார்ந்தோர்க்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.! ‘இறைவன் மிகப் பெரியவன்’அன்புடன், அமீர் என அவர் தெரிவித்து இந்த பதிவை முடித்துள்ளார்.  இதோ அந்த பதிவு…

 

Continue Reading
To Top