Connect with us

CINEMA

ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் இந்த பிரபல இயக்குனரின் கதையா? .. உண்மையை உடைத்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் சங்கர் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் மட்டுமே படம் எடுத்து வந்த இவர் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இயக்குனராக களமிறங்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு தெலுங்கு மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

   

2012 ஆம் ஆண்டு பீட்சா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி மற்றும் மெர்குரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி இருந்தார். இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் கதை என்னுடையது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். அதாவது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு அரசியல் கதையை எழுதியுள்ளார். அந்த கதையை அவருடைய குழுவினரிடம் காட்டிய போது இந்த கதை சங்கர் சார் படத்தின் கதை போல உள்ளது.

அவர் இயக்கத்தில் பெரிய ஹீரோக்கள் நடித்த படம் வேற லெவலில் இருக்கும் என கூறியுள்ளனர். அரசியல் சார்ந்த திரைப்படங்களை இயக்க தனக்கு இன்னும் சில அனுபவங்கள் வேண்டும் என கார்த்திக் நினைத்த நிலையில் கதையை இயக்குனர் சங்கரிடம் கூறியுள்ளார். அது அவருக்கு மிகவும் பிடித்த போக அந்த கதையின் திரைக்கதையை அவரது பாணியில் மாற்றி ஆழமான கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். அந்தக் கதை தான் இப்போது ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ளது என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். அவரின் கதை சங்கர் இயக்கத்தில் திரையில் பார்க்க மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாகவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top