‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் இவ்வளவா..? ஹீரோவை மிஞ்சும் ஹீரோயின்களின் சம்பளம்… வெளியான லிஸ்ட் இதோ…

By Begam

Updated on:

சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்று டிஆர்பி-யில்  முன்னிலை வகிக்கும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’ இந்த சீரியல் இன்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரு கூட்டு குடும்பத்தில் ஆணாதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் எப்படி போராடுகிறார்கள்? என்பதை குறித்து இந்த சீரியல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை குடும்பத்தோடு ஆண்கள் முதல் பெண்கள், குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர்.

   

சமீபத்தில் இந்த சீரியலில் நடித்த நடிகர் மாரிமுத்து இறந்தது சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சீரியலுக்கு தற்பொழுது கொஞ்சம் மவுஸ் குறைந்துவிட்டது என்று கூறலாம். இதனை மீட்டெடுக்க இயக்குனரும் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் தற்பொழுது  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களின் சம்பளத்தை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

நந்தினி:

நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹரிப்பிரியா. இவர் ஒரு நாளைக்கு ரூபாய் 12000 சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.

ஈஸ்வரி:

ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை கனகா. இவர் ஒரு நாளைக்கு ஹரிப்பிரியாவை போலவே 12 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.

ரேணுகா:

ரேணுகா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியதர்ஷினி.இவருடைய சம்பளம் ஒரு நாளைக்கு 10,000  என்றும் கூறப்படுகிறது.

சக்தி:

இந்த சீரியலின் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பவர் சக்தி. இவருக்கு ஒரு நாளைக்கு 10,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

கரிகாலன்:

இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாரிமுத்து அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவ.ர் இவருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

ஜனனி:

இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்பட்டவர் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மதுமிதா. இவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 15,000 வழங்கப்படுகிறது.