பருத்திவீரன் வழக்கில் சூர்யா பெயரை சேர்க்க இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த அமீர்..!!

By Nanthini on மார்கழி 5, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனராகத் திகழும் அமீர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானபோது சூர்யா கேரியரில் அது முக்கியமான படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா ஹீரோவாக நடித்த ராம் திரைப்படத்தை அமீர் இயக்கி இருந்தார். பின்னர் இவர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இந்திய திரை உலகை திரும்பி பார்க்க வைத்தது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்த படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று கூறலாம். தற்போது பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்த பட விவாகரத்தில் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே ஆன மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

   

அதாவது ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பருத்திவீரன் திரைப்படத்தை தயாரிப்பதாக சொன்ன ஞானவேல் ராஜா அமீருக்கு முழு பணத்தையும் திருப்பி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வருவதாக சமீபத்தில் அமீர் கூறினார். அந்த சமயத்தில் ஞானவேல் ராஜா மீது அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் பருத்திவீரன் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது ஞானவேல் ராஜா பாதியில் இருந்து விலகி விட்டதாகவும் அதன் பிறகு கடன் வாங்கி தான் படத்தை முடித்ததாகவும் அமீர் கூறி உள்ளார். ஆனால் இறுதியாக அவரிடம் பருத்திவீரன் பட உரிமையை ஞானவேல் ராஜா மிரட்டி வாங்கியதாகவும் தகவல் வெளியானது.

   

 

இப்படி மாறி மாறி பிரச்சனை ஓடி கொண்டிருக்க ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தயாரிப்பாளர் சங்கத்தில் என்னிடமிருந்து படத்தை எழுதி வாங்கி அவர்களிடம் கொடுப்பதில் குறியாக இருந்தனர். நான் நீதிமன்றம் செல்கிறேன் எனக் கூறிய போது தயாரிப்பாளர் சங்கத்தை மீறி போக கூடாது என கூறினர். அதையும் எதிர்த்து நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் சூர்யா மற்றும் சிவகுமார் ஆகியோர்களின் பெயரை சேர்க்க வேண்டாம் என்று நான் என்னுடைய வழக்கறிஞரிடம் கூறினேன். ஆனால் அவர்தான் என்னுடைய விருப்பம் இல்லாமல் அவர்களுடைய பெயர்களை இதில் சேர்த்து விட்டார் என அமீர் கூறியுள்ளார்.