தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் அதிமுக தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. தமிழக அரசியலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமான திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறார். கடந்த 2021 தேர்தலிலும் இப்பகுதியில் அதிமுக கணிசமான இடங்களை வென்ற நிலையில், வரவிருக்கும் தேர்தலிலும் அதே வெற்றியைத் தக்கவைக்க கட்சி மேலிடம் முழு வீச்சில் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்தச் சூழலில், கொங்கு மண்டலத்தைச் சார்ந்த முக்கிய அரசியல் அமைப்புகள் அதிமுகவிற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த ‘கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின்’ நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், ‘நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின்’ மாநில பொதுச்செயலாளர் எம். தங்கவேல் தலைமையிலான நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளனர். இந்தப் புதிய ஆதரவு வரவுகளை மனமுவந்து ஏற்றுக்கொண்ட பழனிசாமி, அவர்களுக்குத் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். ஏற்கனவே அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், இத்தகைய சிறிய மற்றும் பிராந்திய கட்சிகளின் ஆதரவு அதிமுகவின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பணிகளில் ஆளும் கட்சியான திமுகவை விட ஒருபடி முன்னேறி, அதிமுக ஏற்கனவே வேட்பாளர் நேர்காணல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து முன்னிலையில் உள்ளது. வேட்பாளர் தேர்வுக்காக ரகசிய சர்வேக்களை நடத்தி வரும் அதிமுக தலைமைக்கு, கொங்கு மண்டல அமைப்புகள் வரிசையாக ஆதரவு தெரிவிப்பது தேர்தலுக்கு முன்பே அக்கட்சிக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இக்கூட்டணி பலம் வரும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச மோதல்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. விலை…
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியில் குடிகார கணவன் செய்த கொடூரத்தால், மனைவியே அவனைக் அடித்துக் கொலை செய்த துயரச்…
சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…
பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…
கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…