பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். பார்த்திபன் இயக்கத்தில் உருவான டீன்ஸ் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 13 இளம் வயதினரை மையமாக வைத்து சாகசம் நிறைந்த திரில்லர் கதையாக டீன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. டீன்ஸ் படத்தின் திரை கதையும் இசையும் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.
அனைத்து இடத்திலும் லாஜிக்கை கரெக்டாக யோசித்து படமாக்கியுள்ளார் பார்த்திபன். இன்றைய தலைமுறை நகருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக பீன்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது. இதே போல பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படமும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்தியன் 2 படம் மக்களிடையே வரவேற்பை வரவில்லை.
நெகட்டிவ் ரிவ்யூஸ் அதிகமாக இருப்பதால் இந்தியன் 2 படத்தை விட டீன்ஸ் படத்தை பார்க்க தான் மக்கள் விரும்புவார்கள் என படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படமும், சூர்யா நடிப்பில் உருவான அஞ்சான் படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு அஞ்சான் படம் வரவேற்பை வரவில்லை.
இதனை தொடர்ந்து பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தோடு விஜய் நடிப்பில் உருவான பைரவா திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்போது பைரவா படமும் தோல்வியை சந்தித்தது. அப்படி இருக்க இப்போது பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆகியுள்ளது. ஏற்கனவே இந்தியன் 2 படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளதால் இந்த முறையும் பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படத்தை தான் மக்கள் விரும்புவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.