தேவைப்பட்டால் எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் போடுவேன்.. நடிகை ரச்சிதாவை மறைமுகமாக மிரட்டிய தயாரிப்பாளர்.. வைரலாகும் இணையதள பதிவு..!!

By admin on ஆடி 13, 2024

Spread the love

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கத்தில் உருவான Fire என்ற திரைப்படத்தில் நடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரச்சிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பயர் படத்தில் அவரது காட்சிகளை வீடியோவாக வெளியிட்டனர். அதில் ரச்சிதா கிளாமராக நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் பாலா Fire திரைப்படத்திலிருந்து விலகி விட்டதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

Rachitha Mahalakshmi | Web Stories | Manorama Online

   

இந்த நிலையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் பாலாவின் போஸ்டை குறிப்பிட்டு நான் இந்த ஏமாற்ற இடத்தில் இருந்து ஏற்கனவே வெளியே வந்து விட்டேன். நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். ஆனாலும் பரவாயில்லை. எனக்கு துணையாக ஒருவர் வந்துவிட்டார் என கூறியுள்ளார். மேலும் பயர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சதீஷை டேக் செய்து நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளராக மற்றும் இயக்குனராக இருக்கலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வேண்டாம்.

   

Rachitha mahalakshmi cute in saree | www.cineglams.com | cine glams | Flickr

 

தன்வினை தன்னை சுடும் என கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வணக்கம் ரட்சிதா. நீங்கள் நடிச்சதை தான் உங்க பர்த்டேக்கு நாங்கள் வீடியோவாக போட்டு இருந்தோம். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடல. இன்னும் படம் வெளியில வரும்போது நீங்க நடித்த காட்சிகள் எல்லாமே வெளியே வரும். நீங்கள் சம்பளம் வாங்கிட்டு தானே நடிச்சு இருக்கீங்க. இனாமா நடிச்சு கொடுக்கல.

அந்த அக்ரீமெண்ட் என் கையில இருக்கு. எங்க பணம் வாங்குனதுக்கு ஆதாரமும் என் கையில இருக்கு. அதனால உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க. தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போடுற மாதிரி ஆகிவிடும். மதுரை வினையும் பிக் பாஸ் வினையும் தன்னை சூடும். Fire திரைப்படத்தில் தாங்கள் நடித்ததை மறந்து விட்டீர்கள். படத்தை shit என்று விமர்சனம் செய்திருக்கிறீர்கள். அந்த shit-ல் நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .

Actress Rachitha Mahalakshmi Photos