பாலிவுட் பிரபலமான ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்தியில் வெளியான தடக் என்ற திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். பிறகு தெலுங்கு சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகவில்லை என்றாலும் தனது தாய் மூலமாக மிகப் பெரிய புகழை எட்டியிருக்கின்றார் ஜான்வி கபூர். தற்போது கோஸ்ட் ஸ்டோரி, ரோகி, குட்லக், ஜெர்சி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் கவர்ச்சி காட்டுவதில் தயங்குவதே கிடையாது. சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

தற்போது தனது நெருங்கிய தோழியான ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்திற்கு சென்றிருக்கின்றார். ஆனந்த அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்விகபூர் தங்கத்தால் ஆன உடை ஒன்றை அணிந்திருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்து போய் இருக்கிறார்கள். மேலும் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

