இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சை குதிரை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.

அதே நாளில் தான் பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் திரைப்படமும் ரிலீஸ் ஆனது 13 இளம் வயதினரை வைத்து பார்த்திபன் டீன்ஸ் கதையை உருவாக்கியுள்ளார். முன்னதாக வித்யாசமாக முயற்சியாக பார்த்திபன் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் மெய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பார்த்திபன் பங்கேற்றுள்ளார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்த்திபனை ஒரு சில வார்த்தைகள் பேச வருமாறு அழைத்தார்.

அவரும் மேடைக்கு வந்த உடனே நீங்க எப்படி வேணா கூப்பிடுங்க.. ஆனா கூப்பிடுங்க.. கூப்பிடுற தூரத்தில் இருக்க மாட்டேன். ஆனா நான் கூப்பிடும் போது தூரத்தில் இருக்க மாட்டேன். நான் பக்கத்துல இருப்பேன், நீங்க வெட்கத்தில் இருப்பீங்க. உங்க புருஷன் துக்கத்துல இருப்பாரு, இஸ் இட் ஓகேவா? அதுதான் ஒரிஜினல் டயலாக். ஆனா குட்டி பசங்க படம் அப்படிங்கறதனால அந்த வசனத்தை கட் பண்ணிட்டேன். நான் மெய்மறந்து சந்தோஷமாக இருக்கிறது சினிமாவில் மட்டும்தான். எனக்கு எதுவுமே கிடையாது.

அப்படி இருக்க மெய் இன்டர்நேஷனல் அவார்ட்ஸ் மூலமாக விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. விருது என்பது முத்தம் கொடுக்கிற மாதிரி. கொடுக்குறவங்களுக்கும் சந்தோஷம். வாங்கிறவங்களுக்கும் அது சந்தோஷம். விருது வாங்கிய எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சமீபத்தில் என்னோட பெரிய சந்தோஷம் டீன்ஸ் படம் ரிலீஸ் ஆனது தான் என பேசியுள்ளார். மேடையில் வைத்து ஆரம்பத்தில் தொகுப்பாளனிடம் பார்த்திபன் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
View this post on Instagram
