சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். சினிமா மூலம் பிரபலமானதை காட்டிலும் தன்னுடைய குடும்பப் பிரச்சினைகளால் மிகப்பெரிய புகழை எட்டி விட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களாக வளம் வந்த மஞ்சுளா மற்றும் விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள் ஆவார்.

இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் 2000 ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்று ஆனார்.
திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்ட வனிதா பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டார். தனது மூத்த மகன் ஹரி தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து தந்தையிடனும் முதல் கணவருடனும் சண்டை போட்டு வந்தார். இதையடுத்து அவரது மகன் ஸ்ரீஹரி தற்போது அவரின் தந்தை அரவணைப்பு வளர்ந்து வருகின்றார்.
மகள் ஜோவிகா மற்றும் ஆகாஷுக்கு பிறந்த ஜெயனிதா இருவருடனும் தனியாக வசித்து வருகின்றார் நடிகை வனிதா. இரண்டாவது கணவர் ஆனந்தையும் விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் தனியாக வாழ்ந்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவருக்கு வத்திக்குச்சி வனிதா என்று பெயரும் வைக்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஏற்பட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்தார். பின்னர் பீட்டர் பால் மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் தான் உயிரிழந்தார். தற்போது சினிமாவில் படங்களில் நடிப்பதிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வரும் வனிதா மீண்டும் 4-வது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
