மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள நர்மதா நதிக்கரையில், 200-க்கும் மேற்பட்ட கிளிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இந்தப் பறவைகளின் உயிரிழப்பிற்குப் பறவைக் காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்பட்டது.
இருப்பினும், உயிரிழந்த கிளிகளின் மாதிரிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவை ‘உணவு நச்சு’ (Food Poisoning) காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் வழங்கிய உணவு செரிக்காமல் அல்லது அந்த உணவில் இருந்த நச்சுத்தன்மை காரணமாக இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சூழலில் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்குத் தரம் குறைந்த உணவுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…