தாய்லாந்தில் நான்கு வயதான இரட்டை குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோரை திருமணம் செய்து வைத்த சம்பவம் தான் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த குழந்தைகளின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது தாய்லாந்தில் ஒரு குடும்பத்தில் ஆண் பெண் இரட்டையராக இருந்தால் அவர்களை சகோதர சகோதரிகளாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது அங்குள்ள புத்த மதத்தின் வழக்கம்.
அதாவது ஆண் பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதிஷ்டம் ஆகிவிடும் என்றும் அந்த மதத்தினர் நம்புகிறார்கள்.
