ரீல்ஸ் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி.. நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்..!

By Nanthini on ஆடி 7, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. அப்படி செல்போன் பயன்படுத்தும் அனைவருமே பெரும்பாலும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அடிமையாகிய சிலர் புதுவிதமாக செய்கிறோம் என்ற பெயரில் தினம்தோறும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுகிறார்கள். சில நேரங்களில் அது ஆபத்தில் முடிந்து விடுகிறது. அப்படிதான் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாவட்டம் சங்கரெட்டி மாவட்டம் அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது கயிறு கழுத்தை இறுக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தாருடன் சேர்ந்து ரீல்ஸ் எடுக்கும் போது 3 வயதுடைய சஹஸ்ரா என்ற சிறுமியின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுக்கியதால் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.