தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி தொடங்க உள்ளார். அரசுத் துறையின் 43 சேவைகளை ஒரே இடத்தில் பெரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட காலம் ஏராளமானோர் காத்திருக்கின்றனர். தற்போது புதிய ரேஷன் கார்டு பெற ஈஸியான வழி கிடைத்துள்ளது. அதாவது ஜூலை 15 தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த முகாம்களில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அளித்தால் உடனே அரசு ஒப்புதல் வழங்கும் என கூறப்படுகிறது.
