அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… மகனால் தெருவுக்கு வந்த பெற்றோர்… வீட்டின் முன் பிளெக்ஸ் வைத்து கதறி அழுது போராட்டம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

By Swetha on புரட்டாதி 16, 2026

Spread the love

ஹைதராபாத் மியாபூர் அல்வின் காலனி பகுதியில், தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் செயலைக் கண்டித்து பெற்றோர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களைச் சொந்த வீட்டிற்குள் அனுமதிக்காமல், மகனும் மருமகளும் சேர்ந்து தங்களை மிகக் கொடுமையாகத் துன்புறுத்துவதாகப் பெற்றோர் கதறி அழுது தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர்.

வயதான காலத்தில் ஆதரவின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தத் தம்பதியினர், பெற்ற பிள்ளையே தங்களை வீட்டை விட்டு விரட்டியடித்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கும் பதற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, தங்களுக்குச் சொந்தமான வீட்டைத் தங்களது அனுமதியின்றி விற்பனை செய்ய மகன் முயற்சிப்பதாகக் கூறி, அந்த வீட்டின் முன்பாகப் போராட்டம் நடத்தினர்.

   

https://twitter.com/Telugufeedsite/status/2100058144257044916/video/1

   

தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ஊருக்குத் தெரிவிக்கும் வகையிலும் அவர்கள் வீட்டின் முன் பிளெக்ஸ் பேனர் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெற்றோருக்கு ஆதரவாகப் பலரின் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.