பொதுவாக திருமணத்தின்போது பெண் பிள்ளைகளுக்கு பணம், தங்கம் என வரதட்சணை வழங்குவது வழக்கம். ஆனால் வியட்நாமை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு அவருடைய பெற்றோர் இந்த சீதனத்தோடு சேர்த்து 100 வகை பூனை குட்டிகளை வரதட்சணையாக கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூனை குட்டிகளின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேலிருக்கும். இந்த பூனை குட்டிகள் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கோபிக் லுவாக் காபி கொட்டைகளை சாப்பிட்டு அவை முழுமையாக ஜீரணிக்கப்படாமல் கழிவு வழியாக வெளியேற்றும்.
அந்த கொட்டைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இவை விலையுயர்ந்த காபி கொட்டையாகும். இந்த காபி கொட்டை தொழிலை தங்களுடைய மகள் தொடங்க உதவுவதற்காக இந்த பூனைகளை வரதட்சணையாக அந்த பெற்றோர் அளித்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். பூனை குட்டிகளோடு மண மக்களுக்கு 25 தங்க கட்டி, 17 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நிறுவன பங்கு, ஏழு நிலங்கள், விலை உயர்ந்த சொத்துக்களும் வழங்கப்பட்டுள்ளது.
