விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அரசி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் சத்யா சாய். இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது சீரியலிலும் ஒரு தைரியமான பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கின்றார். தற்போது குமாரவேலை மிரட்டுவதற்காக திருமணம் செய்து விட்டதாக பொய் கதையை கூறி அவர் வீட்டில் அமர்ந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசியின் நிஜ வாழ்க்கையிலும் சுவாரசியமான காதல் கதை தான் நிகழ்ந்துள்ளது.

அதாவது சத்யா சாய் சிறுவயதிலிருந்தே எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிசில் அதிக ஆர்வம் காட்டுபவர். கல்லூரி படிக்கும் போது படிப்பிலும் மத்த ஆக்டிவிட்டியிலும் அதிக திறமையாக இருந்தவரை வேறொரு கல்லூரியில் இருந்து வந்த ப்ரொபசர் அன்புக்கு மிகவும் பிடித்து விட்டது. இருவரும் பேசி பழகி அது அப்படியே காதலாக மாறியுள்ளது. பிறகு ஒரு கட்டத்தில் அன்பு மற்றும் சத்யா சாய் காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிறகு ஒரு வழியாக பேசி சம்மதித்து இருவரும் எளிமையாக மதுரையில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது சத்யா சாய் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்க அவரது கணவர் அன்பு அதற்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறார். தனது கணவருடன் சத்யசாய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
