சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து ரயிலில் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து கொண்டிருந்த நிலையில் தனது மகளை அழைத்துச் செல்ல தந்தை வந்திருந்தார். ரயிலில் இருந்த இறங்கிய மாணவி 25 வயதான வாலிபர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளார். பிறகு அங்கு நின்று கொண்டிருந்த தனது தந்தையிடம் சென்று அந்த வாலிபருக்கு பணம் தரும்படி கூறியுள்ளார். உடனே தந்தை அவர் யார் என்று கேட்க மாணவி உடனே, அது என்னுடைய காதலன்.
நீங்கள் பணம் தந்தால் நாங்கள் இருவரும் வெளியூருக்கு சென்று பிழைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வந்த அனைவரும் காதல் ஜோடியை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் உடனே சம்பாவி இடத்திற்கு வந்த போலீசார் காதல் ஜோடியை மீட்டனர்.
விசாரணையில் கல்லூரி மாணவி வேலை செய்யும் துணி கடைக்கு சென்றபோது அந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறியதும் அந்த வாலிபர் மீது குற்ற வழக்குகள் நிறுவையில் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அந்த மாணவி தனது பெற்றோருடன் செல்ல மாட்டேன் காதலனுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் திருமணம் ஆகாததால் கல்லூரி மாணவியை பெண்கள் பாதுகாப்பு அதிகாரிகள் முன் ஆசை படுத்தி மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிறகு வாலிபருக்கு பெற்றோர் யாரும் இல்லாததால் உறவினர்களை அழைத்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதி வாங்கி அறிவுரை அனுப்பி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…