Connect with us

CINEMA

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜித்தாவின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள்…

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக  ஒளிபரப்பாகும்  சீரியல் ‘ பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இதில் முதல் மருமகளாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா.இந்த சீரியல்   மூலமாக அனைத்து மக்கள்  வீட்டிலும் செல்ல மருமகளாக மாறியுள்ளார்  நடிகை சுஜிதா.

   

நடிகை சுஜிதா கேரளாவை சார்ந்தவர். இவர் தந்தை மணி இவர் தாயார் ராதா. இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உள்ளனர். இவர் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.இவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான்.

இவர் தமிழ் சீனிமாவில் முதலில்  41 நாட்கள் குழந்தையாக பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு படத்தில்’ குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சுஜிதா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  உடன்  மனிதம்,

நடிகர் சத்யராஜ் நடித்த ‘பூவிழி வாசலிலே’ வாலி ,இருவர், தியா. பள்ளிக்கூடம் உள்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து தெலுங்கு கன்னடம், மலையாளம் ,போன்ற மொழி படங்களிலும்  நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்புகள்  குறைய  நிலையில்  சின்னத்திரை சீரியலில்  நடிக ஆரம்பித்தார் . இவர் சுமார் 30 சீரியலுக்கு மேல் நடித்திருப்பார். இவர்  மிக பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.நடிகை  சுஜிதா பிற மொழி சீரியலிலும் நடித்துள்ளார்.

நடிகை சுஜிதா  திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் என்பவரை 2012 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் சமீப காலமாக  ‘கதைகேளு கதைகேளு’ என்ற you tube  சேனலை தொடங்கியுள்ளார். இதில் 651 கே சப்ஸ்கிரைப் உள்ளனர்.

பேஸ்புக்கில் சுஜிதா தனுஷ் என்ற பக்கத்தில் 240 k  பாலோவர்ஸ் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் சுஜிதா தனுஷ் என்ற பக்கத்தில் 1.2 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.இவர் சமீபத்தில் தன்  குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை  இணையத்தில் வெளியிடுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top