Connect with us

CINEMA

80 களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த நடிகை வனிதா கிருஷ்ணாச்சந்திரனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

80ஸ் களில்  சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா கிருஷ்ணச்சந்திரன்  இவர் 1965 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவர் தந்தை கணேஷ் தாய் கமலா. நடிகை வனிதா கிருஷ்ணச்சந்திரன்  13 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் வெளியான ‘படை மாறினால் ‘ என்ற படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

அதை தொடர்ந்து  ஈநாடு , கைகேயி ,எனக்கும் ஒரு தெய்வம்  போன்ற படங்களில் நடித்து மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.  மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களான மம்முட்டி, மோகன்லாலுக்கு ஜோடியாக  நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இவர் தமிழில் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘பதாய் மாறினால்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து  கனா கண்டேன், பாரிஜாதம், புதுயுகம்,  வேலி,  என் செல்லமே,  சண்டை போன்ற பல தமிழ் திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் சீரியலில் தனது காலடி தடத்தை பதித்தார். 2001 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘கால்முளைத்த ஆசை’ சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் கோலங்கள், கனவுகள் ஆயிரம், மாதவி,  முள்ளும் மலரும்,  கல்யாண பரிசு 2 போன்ற பல சீரியல்கள்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்  மொழி சீரியல்களிலும்  நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் அமிர்தா டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பிரன்னோல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன் என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமிர்தவர்ஷினி என்ற ஒரு மகளும் உள்ளா.ர் தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top