#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதல் சீசன் அன்னையில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் இறுதியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை லாவண்யா. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பிறகு காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அவரும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகியதால் சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லாவண்யா திருப்பூரை சேர்ந்தவர். மாடலின் மூலமாக மீடியாவிற்குள் நுழைந்தார். தற்போது இவர் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் லாவண்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்து கூறியுள்ளார். அதில், நான் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தேன். அப்போது நான் செய்த அனைத்து விஷயங்களும் என்னுடைய காதலருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு மாடலிங் என்றால் மிகவும் பிடிக்கும். எனது வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக என்னுடைய காதல் தடையாக இருந்ததால் நான் பிரேக் அப் செய்து விட்டேன் என லாவண்யா வெளிப்படையாக கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…