#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து வெற்றிகரமாக 7-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இவர் தொகுத்து வழங்கும் விதத்திற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம் இருந்தனர். இவரை போல யாரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது நடிகர் கமலஹாசனுக்கு அதிகமான haters -களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பிரதீப் ரெட் கார்ட் விவகாரம், மாயா கேங் -க்கு சப்போர்ட் செய்வது என கமலஹாசனின் இந்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 உடன் இனி கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை அப்படி கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டால் அவருக்கு பதிலாக எந்த நடிகர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனவும் ரசிகர்கள் மத்தியில் அடுத்த கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை கமலஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார் .
அதேபோல தற்பொழுது கமலஹாசனை வெளியேற்றி விட்டு நடிகர் சிம்புவே தொகுத்து வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து கூறி வருகின்றனர் .சிம்பு மட்டும் இன்றி மற்றொரு பிரபலத்தின் பெயரையும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அவர் வேற யாரும் இல்லை. நடிகர் சரத்குமார் தான். நடிகர் சரத்குமார் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகவல் உண்மையா என்பது நமக்கு தெரியவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…