என்னடா இது… மாலையும் கழுத்துமா நிக்குறாங்க..? பிரபல சீரியல் ஜோடி வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்..

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில்  ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன் தம்பிகளின் பாசத்தை கொண்டும்,  கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

snapinsta 14

இந்த சீரியலை தந்தை- மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. இந்த சீரியலில் பல்வேறு புது முக நடிகர்களும், நடிகைகளும்  நடித்து வருகின்றனர். அதன்படி ராஜி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஷாலினி. இவரை தற்போது ரசிகர்கள் சின்னத்திரை பிரியங்கா மோகன் என்று கொண்டாடி வருகின்றனர்.

   

புதுமுக நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ள ஷாலினி முதன் முதலில் தனது கணவருடன் இணைந்து youtubeல் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலமடைந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கதாநாயகி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த போட்டியில் அவர் ரன்னர் அப்-ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

தற்பொழுது கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை தனது நடிப்பால் ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதைப்படி கதிருக்கும், ராஜிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவர்களே வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவர்களுக்கு நிஜத்தில் இதுபோல திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ஷாலினிக்கு ஏற்கனவே நிஜ வாழ்க்கையில் திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar