நீச்சல் உடையில் அப்படி ஒரு போஸ்… என்ன பூர்ணிமா பிக் பாஸுக்கு அப்றம் உங்க ரேஞ்சே மாறிடுச்சு.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டு ஜனவரி மாதத்தில் நிறைவடைந்தது. . இந்நிகழ்ச்சியில்  கூல் சுரேஷ், பாவா செல்லதுரை,, விசித்ரா, விஷ்ணு ,வினுஷா தேவி, சரவணன் விக்ரம், ஜோவிகா, மாயா , பூர்ணிமா  உட்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

   

 

நன்றாக சென்று கொண்டிருந்த  இந்நிகழ்ச்சியில் ஒரு புயல் அடித்தது. அதுதான் பிரதீப் ரெட் கார்டு விவகாரம். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி வெடித்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர். வைல்ட் கார்டு என்ட்ரியில் களமிறங்கிய அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் பூர்ணிமா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே சோசியல் மீடியாவில் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் சேர்ந்து இவர் செய்தவேலைகளால் அதிகம் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு அதிகம் வெறுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பைனலில் ஜெயிக்க மாட்டோம் என்பதை அறிந்த அவர்,   பிக் பாஸ் வீட்டை விட்டு  பூர்ணிமா 16 லட்சம் தொகையுடன் கூடிய  பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

தற்பொழுது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். மீண்டும் தனது போட்டோஷூட்  புகைப்படங்களை  இணையத்தில் பதிவு செய்ய தொடங்கியுள்ளார். தற்பொழுது நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.