சன் டிவிக்கு நிகராக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் சேனல் தான் விஜய் தொலைக்காட்சி. இந்த சேனலில் ஒளிபரப்பாகக்கூடிய சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக குடும்ப கதை என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ்தான் என்று சொல்லும் அளவுக்கு அந்த சீரியல் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. முதல் பாகம் முடிந்த வேகத்தில் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாக தொடங்கியது.

முதலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை உணர்த்த இந்த இரண்டாம் பாகம் அப்பா மகன்களின் பாசத்தை உணர்த்தி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் வெங்கட்ரங்கநாதன். இவர் முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இதனிடையே இன்ஸ்டவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வெங்கட் சமீபத்தில் ஒரு சூப்பரான விஷயத்தை வெளியிட்டுள்ளார். அதாவது வெங்கட் சென்னையில் புதிய கடை ஒன்றை திறந்து உள்ளார். வீடியோவுடன் அவர் அதை அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/DKo7w8lRXaz/?igsh=MXF2bDF3MXRncGNtMw==
