அப்பாடா.. ஒருவழியா முடியப்போகுதுப்பா… இறுதிக்கட்டத்தை எட்டிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.. வெளியான ப்ரோமோ…

By Begam

Published on:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

   

தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி , தொடர்ந்து TRP யில் முன்னிலையும் வகித்து வந்தது. இடையில் கொஞ்சம் டல் அடித்தாலும், தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கிய இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் சீரியல் இறுதி நாள் ஷூட்டிங்கில் ஒட்டுமொத்த சீரியல் குழுவினரும் இணைந்து கேக் வெட்டி, கொண்டாடி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது.

இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் வரும் என்றும் தகவல்கள் வெளியானது.   தற்போது விஜய் தொலைக்காட்சி  உறுதிப்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரின் ப்ரோமோவெளியிட்டு வருகிறது. அதன்படி , பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த குடும்பமும் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…