பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை… கூடவே வந்த குட் நியூஸ்..!

By Nanthini on கார்த்திகை 4, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தில் நடித்தவர்களில் ஸ்டாலின், ஹேமா மற்றும் வெங்கட் உள்ளிட்ட ஒரு சிலர் இரண்டாவது சீசனிலும் நடிக்கிறார்கள். இரண்டாவது சீசன் மக்களை வெகுவாக கவர்ந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  இரண்டாம் பாகத்தில் அப்பா மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் சீரியலின் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் போலவே வீட்டிற்கு வந்த மருமகள்களும் பாசத்துடன் நடந்து கொள்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோரேஸ் 2வில் இப்போது என்ன நடக்கிறது.. புரொமோ பாருங்க

   

தங்கமயில் நல்லவரா கெட்டவரா என்று இதுவரை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தினம்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல டிவியில் ஒளிபரப்பான கதாநாயகி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியவர் தான் ஷாலினி. இவர் சிறு வயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த நிலையில் பெற்றோர்களின் நிபந்தனைப்படி சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்பம் மற்றும் குழந்தை என செட்டிலாகாமல் தற்போது சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

   

Pandian Stores 2 | 25th to 27th April 2024 - Promo - YouTube

 

இவருடைய கனவுக்கு அவரின் கணவரும் துணை நின்ற நிலையில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷாலினி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் சீரியலில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தாலும் மறுபக்கம் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் ராஜி கதாபாத்திரத்திற்கு யார் வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ராஜியின் நிஜ கணவர் யார் தெரியுமா? இந்த பிரபலம் தானா?  இப்படி ஒரு மறுபக்கமா? | Pandian Stores 2 Raji's Real Husband and she  biography - Tamil Oneindia