நடிப்பு வேண்டாம் படிக்கப்போ-ன்னு அம்மா சொன்னாங்க ஆனா அப்பா… ஓப்பனாக பேசிய விஜய் சேதுபதி மகன்…!!

By Soundarya on கார்த்திகை 4, 2024

Spread the love

பிரபல நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிறு வயதில் தனது தந்தையான விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடிதான், சிந்துபாத் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது வளர்ந்து இளைஞராகி விட்ட அவர், பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

#image_title

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், நான் சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என் அப்பா தினமும் செலவுக்கு 500 ரூபா தான் கொடுப்பாரு. அதனால தான் சினிமாவுல ஜெயிக்கணும்னு வந்திருக்கேன். சிந்துபாத்’தில் அவருடன் நடித்தபோது, அவரது கண்ணைப் பார்த்து நடிக்க ரொம்பவே பயந்தேன்.

   
   

#image_title

 

சின்ன வயசுல இருந்து அப்பாவோட சேர்ந்து படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அதில் உள்ள காட்சிகளை அதற்கான உழைப்பை அவர் அழகாக விளக்கிச் சொல்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்திருக்கேன். அந்த சூழல் தான் எனக்கு ஒரு சினிமா ஆசையை விதைத்தது என்று நினைக்கிறேன். அப்பா கிட்ட ரொம்பவும் பேசிக்க மாட்டேன். வெளியே பேட்டிகளில் அவர் எப்படி பேசுவாரோ அப்படித்தான் வீட்டில் பேசுவார்.

#image_title

அவருடைய அணுகுமுறை பிரமிப்பாய் இருக்கும். நடிப்பு பற்றி அவர் பத்து விஷயங்கள் சொன்னார் என்றால் அதில் இரண்டு தான் எனக்கு புரியும். சிந்துபாத்தில் அவருடன் நடித்த போது அவருடைய கண்ணை பார்த்து ரொம்பவே பயந்தேன். நானும் ரவுடிதான் நடிச்ச போது நான் ரொம்ப இன்னசென்ட். அதனால இயக்குனர் சொல்றதை செய்யறது எளிதாக இருந்தது. அதன் பிறகு சிந்துபாத் நடிக்க கூப்பிட்டாங்க. அப்போ அம்மா என்னிடம் நடிப்பு வேண்டாம் படிப்பில் கவனம் செலுத்துன்னு சொன்னாங்க. ஆனால் அப்பா அது அவன் விருப்பம் என்று சொன்னார்.. எல்லா கதாபாத்திரங்களிலும் பெயர் எடுக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை