“இனி பழனி போனா கியூல நிக்கவே வேண்டாம்”…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…. ஆன்லைனில் வந்த செம அப்டேட்…..!

Spread the love

உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இத்தகைய சூழலில், பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு டிஜிட்டல் சேவைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் முக்கியப் பகுதியாக, பழனி மலைக்கோயிலுக்குச் செல்வதற்கான ரோப்கார் ஆன்லைன் முன்பதிவுச் சேவை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி, பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு உகந்த நேரத்தைத் தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் சென்று வர ஒரு நபருக்கு 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஆன்லைன் முன்பதிவு மூலம் நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 50 பேரும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இச்சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், இடைத்தரகர்களின் தொல்லை குறைவதோடு பக்தர்களின் நேர விரயமும் பெருமளவில் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பழனி கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது, பக்தர்கள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் இம்முடிவு விரைந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மின்இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கால பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி மிக விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப முயற்சிகள் பழனிக்கு வரும் ஆன்மிக அன்பர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.

Nanthini

Recent Posts

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

25 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

33 minutes ago

திடீர் திருப்பம்… அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி?… அதிரப் போகும் டெல்லி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…

37 minutes ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

48 minutes ago