BREAKING: பழனி கோயில் நில வழக்கு… வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே பலி…. சார் பதிவாளர் ICU-வில் அனுமதி…. தீவிரமடையும் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நில முறைகேடு வழக்கில், கைதான 11 பேரில் ஒருவரான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே திடீரென உயிரிழந்ததும், அதைத் தொடர்ந்து கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் இத்துறை சார்ந்த வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய குற்றவாளிகள் அடுத்தடுத்து உயிரிழப்பதும், மருத்துவமனையில் சேர்ப்பதுமாக இருக்கும் சூழல், இந்த வழக்கில் பின்னணியில் இருக்கும் சக்திவாய்ந்த நபர்களைக் காப்பாற்ற நடக்கும் சதியோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளதுடன், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வர இவ்வழக்கைச் சிபிஐ அல்லது நியாயமான உயர் மட்ட விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது.